டிஎன்பிஎஸ்சி தேர்வு கலந்தாய்வு குறித்த அறிக்கைகளை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149- ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டிராஜன், பெஞ்சமின், பாடநூல் கழக தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், செக்கிழுத்த செம்மலாக போற்றப்படுபவர், நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க பெரும்பங்காற்றியவர் வ.உ.சி. சிதம்பரனார் ஆவார்.
மேற்கொண்டு பேசிய ஜெயக்குமார், டி.என்.பி.எஸ்.சி கலந்தாய்வு நடத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், குரூப்-4ல் மொத்தம் 9500 பணியிடங்கள் உள்ளது, அவற்றில் 6500 பணியிடங்கள் ஊரடங்கிற்கு முன்பே நிரப்பபட்டது.
மீதம் உள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் ஆகிய பிரிவில் 3ஆயிரம் பணியிடங்கள் கலந்தாய்வுக்கு உள்ளது, ஊரடங்கு காரணமாக அவர்களுகான கலந்தாய்வு தள்ளிப்போயுள்ளது.
பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.