நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பது பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை எனவும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலுள்ள குருமந்தூர் பகுதியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் திறப்பது பற்றி இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை.
கொரோனா தாக்கம் குறைந்த பின்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் மனநிலையை அறிந்த பின்பு முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் எனவும்,
கல்விக் கட்டணம் செலுத்துவது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் முடிவுகள் அடிப்படையில் அறிவிப்புகளை வெளியிடுவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.