நவம்பர் 8ல் ரிலீஸ் ஆகும் படத்தின் நாயகியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ

0
161

நவம்பர் 8ல் ரிலீஸ் ஆகும் படத்தின் நாயகியை நேரில் அழைத்து பாராட்டிய தமிழக அமைச்சர்

சிம்புவின் ‘மாநாடு’ படத்தை தயாரிக்கவுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கிய படம்’மிக மிக அவசரம்’. பெண் போலீஸ் ஒருவர் பொது இடத்தில் பந்தோபஸ்துக்கு சென்றபோது அவருக்கு ஏற்படும் அவஸ்தைகளை இந்த படம் தத்ரூபமாக எடுத்து காட்டியுள்ளதாக இந்த படத்தை ஏற்கனவே பார்த்த பத்திரிகையாளர்கள் பாராட்டி வருகின்றனனர்

’மிக மிக அவசரம்’ படம் கடந்த மாதம் 11ஆம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த படத்திற்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்கள் வேறொரு படத்திற்கு ஒதுக்கப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 8ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது

இந்த நிலையில் மிக மிக அவசரம்” படத்தைப் பார்த்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ அவர்கள் இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை தனது வீட்டிற்கு நேரில் வரவழைத்து பாராட்டினார். இந்தபடத்தில் ஒரு பெண் காவலரை தனது நடிப்பில் அப்படியே கொண்டு வந்திருப்பதாக ஸ்ரீபிரியங்காவை அமைச்சர் பாராட்டினார்.

இந்த சந்திப்பின்போது ஸ்ரீபிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தை பார்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த படத்தை பெண் காவலர்கள் அனைவரும் பார்க்குமாறு பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீபிரியங்கா, ஹரிஷ், முத்துராமன், லிங்கா, அரவிந்த், சரவணா சக்தி உள்பட பலர் நடித்த இந்த படத்தில் சீமான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இஷான் தேவ் இசையில் பாலபரணி ஒளிப்பதிவில் சுதர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

Previous articleஇந்தியன் 2’ படப்பிடிப்பின்போது பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர்!
Next articleகடலூர் மாவட்டச்செயலாளர் பதவிகளை வன்னியர்களுக்கே கொடுத்த EPS OPS! பாமகவுக்கு நெருக்கடி கொடுக்கவா?