தமிழகத்தில் உருவாகப் போகும் புதிய மாவட்டங்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு !!

Photo of author

By Vijay

தமிழகத்தில் உருவாகப் போகும் புதிய மாவட்டங்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு !!

Vijay

Minister KKSSR Ramachandran's announcement of new districts to be formed in Tamil Nadu !!

தமிழகத்தில் உருவாகப் போகும் புதிய மாவட்டங்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு !!

நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு மாநிலம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும், அரசியல் ரீதியாகவும் கலை பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் சிறந்து விளங்குகின்ற மாநிலமாக திகழ்ந்து வருகிறது, 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 39 நாடாளுமன்ற தொகுதிகள் என தன்னகத்தே கொண்டுள்ள மாநிலம் தான் தமிழ்நாடு.

இங்கு பல அரசியல் கட்சிகள் செயல்பட்டு வந்தாலும் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர், பரப்பளவில் பெரிதாக உள்ள மாவட்டங்களை இரண்டாக பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என பல வருடங்களாகவே அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் கூறிவருகின்றனர், அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்ப்பது போல் அவ்வப்போது ஒரு சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது சட்டமன்ற கூட்ட தொடரில் பல்வேறு துறைகள் மீதான விவாதம்  நடைபெற்று வருகிறது, அதில் தமிழக வருவாய் பேரிடர் துறை அமைச்சர் ராமசந்திரன் துறை ரீதியான கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், தமிழகம் முழுவதும் உள்ள பெரிய மாவட்டங்களை பிரித்து புதிதாக எட்டு மாவட்டங்களை உருவாக்க தமிழக எம்பிக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

 பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வரப்பெருவதால் இதை கனிவுடன் பரிசிலித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தற்போது உள்ள நிதி நிலைகளுக்கு ஏற்றவாறு முதல்வரின் அனுமதி பெற்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறினார்.