பரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரருக் வரவேற்ற அமைச்சர் மா சுப்பிரமணியன்!

Photo of author

By Sakthi

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி ஆரம்பித்து நடந்து வருகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விளையாட்டு போட்டிகளில் 162 நாடுகளை சார்ந்த 4 403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருக்கிறார்கள். பாராலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற இருக்கின்ற நிலையில், இதுவரையில் இந்தியா 2 தங்கம் 6 வெள்ளி 5 வெண்கலம் என்று 13 பதக்கங்களை வென்றிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் dd61 போட்டியில் இந்தியாவின் சார்பாக தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த மாரியப்பன் தங்கவேலு என்பவர் பங்கேற்றார். இவர் ஏற்கனவே சென்ற 2016 ஆம் வருடம் நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். ஆகவே இந்த முறையும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளிப்பதக்கம் அவர் வென்றிருக்கிறார்.

மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றிருக்கிறார். மற்றொரு வீரர் சரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இந்த சூழ்நிலையில், மாரியப்பன் தங்கவேலு ஜப்பானிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்தார். டெல்லி வந்து சேர்ந்த அவரை தமிழக அரசின் சார்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சென்று வரவேற்று வாழ்த்துக்களை கூறினார்.