மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு நற்செய்தி! அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Photo of author

By Sakthi

மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு நற்செய்தி! அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Sakthi

கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கூட்டி தீர்த்த கனமழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக கூறியிருக்கிறார்.

மகளிர் சுய உதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இருக்கின்ற மகளிர் சுய உதவி குழுவினருக்கு 75 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி தயார் நிலையில் இருக்கிறது என்றும், அது மிக விரைவில் தள்ளுபடி செய்யப்படும் எனவும் உறுதியளித்திருக்கிறார்.
அத்துடன் பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் என்ற காரணத்தால் விடுபட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார். அதோடு கடந்த வருடத்தை விடவும், இந்த வருடம் 20 சதவீதம் விவசாயிகள் கூடுதலாக காப்பீடு செய்திருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்த பின்னர் நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.