நடிகர் சங்க தேர்தலையே நடத்த முடியாதவர்கள் நாட்டை வழிநடத்துவார்களா? ஓ.எஸ்.மணியன்

Photo of author

By CineDesk

நடிகர் சங்க தேர்தலையே நடத்த முடியாதவர்கள் நாட்டை வழிநடத்துவார்களா? ஓ.எஸ்.மணியன்

நடிகர் சங்க தேர்தலையே ஒழுங்காக நடத்த முடியாத நடிகர்கள் நாட்டை வழி நடத்துவார்கள் என்ற என்று தமிழக அமைச்சர் ஓ எஸ் மணியன் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் நடத்தியபோது அதில் முறைகேடு நடந்ததாக கூறி ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நடிகர் சங்க தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் உள்ளன. எனவே நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் முடிவு அறிவிக்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த தேர்தலின் போது பல குழப்பங்கள் நடைபெற்றதாகவும் குறிப்பாக தபால் ஓட்டுகளை ரஜினிகாந்த் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் ஓட்டு போட முடியாத வகையில் குழப்பங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலையே ஒழுங்காக நடத்தி நியாயமான முடிவை ஏற்படுத்த முடியாத மூத்த நடிகர்கள் நாட்டை எப்படி வழிப்படுத்த முடியும் என்று அமைச்சர் ஓ எஸ் மணியன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு முன்னர் ரஜினி, கமல், போன்ற மூத்த நடிகர்களும், நாசர், கார்த்தி, விஷால் உள்பட போன்ற நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்களும் என்ன பதில் அளிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்