News

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடந்தது என்ன? இன்று வெளியாகப் போகும் வெள்ளை அறிக்கை அதிர்ச்சியில் அதிமுக!

Photo of author

By Sakthi

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடந்தது என்ன? இன்று வெளியாகப் போகும் வெள்ளை அறிக்கை அதிர்ச்சியில் அதிமுக!

Sakthi

Button

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 4ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நடப்பு வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையும், வரும் 13ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது அதோடு வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.

சென்ற பத்து வருட காலமாக அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில், அரசின் நிதிநிலை விவரங்கள் அடங்கிய தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை இன்றைய தினம் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட இருக்கின்றார். 120 பக்கங்கள் கொண்ட இந்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 9 மணி அளவில் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வெள்ளை அறிக்கையை தமிழக சட்டசபையில் வெளியிட வேண்டிய அவசியம் கிடையாது எனவும், நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். சென்ற பத்து வருட காலமாக அதிமுக ஆட்சியில் இருந்தபோது நடந்த வருவாய் இழப்பு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அசராத பெட்ரோல் டீசல் விலை!

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்! அதிரடி முடிவு எடுத்த திமுக தலைமை!

Leave a Comment