DMK: மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான போரானது வளர்ந்து கொண்டு செல்கிறது. குறிப்பாக மத்திய அரசு மாநிலத்திற்கு தர வேண்டிய எந்த ஒரு நிதியையும் ஒதுக்காமல் தங்களின் ஆதிக்கத்தை எந்த வழிகளிலெல்லாம் செயல்படுத்தலாம் என்பதையே நோக்கமாகக் வைத்துள்ளது. அதன் வெளிப்பாடாக இரு மொழிக் கொள்கையை எதிர்த்த பின், மாநில அரசுகளின் அனுமதி இல்லாமலேயே சிபிஎஸ்இ பள்ளிகள் நிறுவப்படலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது.
அதேபோல மக்கள் கணக்கெடுப்பு நடத்தி தொகுதியில் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது அனைத்தும் மாநிலத்திற்கு கொடுக்கும் நெருக்கடி, இவை அனைத்திற்கும் மாநில அரசானது தொடர் கண்டனம் தெரிவித்து வருகிறது. இருமொழிக் கொள்கையை எதிர்ப்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ் கற்றால் பிச்சை தான் எடுக்க வேண்டும் இதனால் எந்த ஒரு பயனும் இல்லை என கொச்சையாக பேசினார்.
இவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பலரும் எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் இது குறித்து பேசியுள்ளார். நீங்களெல்லாம் ஒருத்தியை ஐந்து பேர் திருமணம் செய்வீர்கள் எங்களுக்கு ஒருத்தனுக்கு ஒருத்தி தான். நாங்கள் எல்லாம் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று கதவை மூடி விடுவோம், நீங்கள் அப்படி கிடையாது. எங்களை நாகரிகமற்றவர் என்று நீங்கள் கூறுகிறீர்கள், நாக்கை அறுதுப்புடுவோம் ஜாக்கிரதை. இதனால்தான் நாவடக்கம் தேவை என்று ஸ்டாலின் உங்களை கூறியுள்ளார். இவரின் இந்த ஆரவார பேச்சானது இணையத்தில் வைரலாகி வருகிறது.