ஆட்சி மாறினால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு மாறிவிடுமா? கடுப்பான உச்ச நீதிமன்றம்!

0
112

திமுக அமைச்சரவைகள் மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதிவிறகித்து வருகிறார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையில் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2006 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தது.

சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்த வழக்கு பதிவு காரணமாக அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவருடைய குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தியது. அதோடு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிறான சொத்துக்களை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.

இந்த நிலையில் தனக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தொடக்கத்திலேயே கடுப்பான நீதிபதிகள் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய கூறுவது என்பது ஒரு மாநிலத்தில் ஆட்சி மாறியவுடன் ஆரம்பமாகும் ஒரு வழக்கமான நடைமுறையாக இருக்கிறது.

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த கட்சியினர் தங்கள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்கிறார்கள் இது அதிசயமான நடைமுறையாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்தார்கள் நீதிபதிகள்.

இந்த நீதிமன்றம் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறது ஆட்சி மாறிவிட்டால் அனைத்து நடைமுறையும் மாற வேண்டும் என்று எந்த விதமான கட்டாயமும் இல்லை ஆட்சிக்கும் இது போன்ற வழக்கு விசாரணைக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் ஆட்சி மாறிவிட்ட காரணத்தால் வழக்கு விசாரணையையும், நீதிமன்ற விசாரணையையும் மாற்ற இயலுமா? என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.

தங்களுடைய கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள தாங்கள் தயங்கலாம் ஆனால் ஆட்சி மாறிவிட்டதால் அரசு இயந்திரத்தின் இயக்கம் மாறிவிடாது என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் மனுவை திரும்ப பெற அனுமதிக்கோரப்பட்டது. மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

Previous articleதமிழகத்தில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Next articleஅரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடாது! அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி எடப்பாடி பழனிச்சாமி!