தமிழகத்திற்கு மக்கள் தொகையின் அடிப்படையில் தடுப்பூசி வழங்க வேண்டும்! அமைச்சர் ராமச்சந்திரன்!

0
112

வனங்களில் சுற்றி தெரியும் விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் விதமாக காடுகளின் எல்லைகளில் சிமெண்ட் கான்கிரீட் சுவர் அமைக்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பகுதியில் மாநகராட்சியின் சார்பாக நடத்தப்பட்ட தூய்மை பணி மற்றும் மருத்துவ முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன் தமிழ்நாட்டில் சென்ற ஐந்தாவது மாதத்திலிருந்து மக்கள் அனைவரும் பாராட்டும் விதத்திலும் அரசியல் தலைவர்கள் எல்லோரும் பாராட்டும் விதத்திலும் எதிர்க்கட்சிகள் எந்தவிதமான குறையும் சொல்ல இயலாத விதத்திலும் மிகச் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. ஒவ்வொரு தினமும் மக்களுக்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய தினத்தில் அரசுப் பள்ளியில் படித்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் என கூறியிருக்கிறார் அமைச்சர் ராமச்சந்திரன்.

நேற்றைய தினத்தில் இருந்து ஐந்து தினங்களுக்கு வரும் முன் காப்போம் என்ற திட்டத்தை மாநில அரசு கையில் எடுத்து செயல்படுத்தி வருகின்றது. கோயமுத்தூரில் இருக்கின்ற 100 வார்டுகளிலும் முப்பத்தி 36 .12 கிலோமீட்டர் தூரம் இருக்கின்ற கால்வாய்கள் தூய்மை படுத்தப்பட இருக்கிறது. இந்த தூய்மைப் பணியை மேற் கொள்வதன் மூலமாக மழைநீர் எங்கும் தேங்கி இருக்காமல் சுகாதாரமாக திகழும் இதனால் டெங்கு உருவாகாமல் தடுக்க இயலும் இந்த தூய்மை பணி தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது என தெரிவித்திருக்கிறார்.

அதே போல வீடு தேடி வரும் மருத்துவம் என்ற திட்டத்தின் அடிப்படையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள். முதலில் பொதுமக்களிடம் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. தற்சமயம் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால் தடுப்பூசி திருத்திக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

தமிழக மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசியும் வணங்கினால் இன்னும் விரிவாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டு அவர்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற இயலும் என தெரிவித்து இருக்கிறார்.

காடுகளின் எல்லையில் சிமெண்ட் காங்கிரட் போடும் திட்டம் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. தற்போதுதான் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்து இருக்கிறது. இதன் காரணமாக, இந்த திட்டத்திற்கு மார்ச் மாதத்திற்கு பின்னர் நிதி ஒதுக்கப்படும் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டிவிட்டால் இதை யானை இடிக்காது. பன்றி, மான்கள் போன்றவை அதை தாண்டியும் வராது என கூறியிருக்கிறார்.

சிறுமுகையில் புலி உயிரிழந்தது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது. புலியின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆய்வின் முடிவுகள் வந்தவுடன் இறப்பிற்கான காரணம் என்ன என்பது தெரிய வரும் என்று கூறியிருக்கிறார்.

Previous articleமுதலமைச்சர் இதை செய்யத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்! சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!
Next articleபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை! அரசுப் பள்ளி மாணவர்கள் இனி இதற்காக கஷ்டப்பட தேவையில்லை!