மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு!
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் இன்று காணொளி மூலமாக ஆலோசனை நடத்தி வருகின்றார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் இணையதள வகுப்பு நோய்த்தொற்று சூழல் போன்றவற்றை குறித்தும் ஆலோசனை செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், புதிய கல்விக்கொள்கை குறித்த ஆலோசனை கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணித்து இருக்கிறது என சொல்லப்படுகிறது. கல்வித்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்க அனுமதி கோரியும் அதற்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தால், தமிழக அரசு மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.