தமிழகத்தில் எதிர்வரும் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் அரசியல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய சட்டசபைத் தொகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கே இருக்கக்கூடிய மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து வருகின்றார்.
அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதல்வர், துணை முதல்வர், என்று இருவருமே தமிழகம் முழுவதும் தங்களுடைய சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு கடந்த நான்காண்டுகளில் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள், செய்த சாதனைகள் போன்றவற்றை பட்டியலிட்டு வருகிறார்கள்.
அதேபோல அதிமுகவை சார்ந்த சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் போன்றவர்களும் அவரவர் தொகுதி மக்களை சந்தித்து அதிமுகவின் சாதனைகளை தெரிவித்து ஓட்டுக்களை கேட்டு வருகிறார்கள். அந்த வகையில். மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜு செல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது.
சென்ற இரண்டு தேர்தல்களிலும் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்த அமைச்சர் செல்லூர் ராஜு இந்த முறையும் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்று சொல்லப்படுகிறது.ஆகவே நாள்தோறும் ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்த சமயத்தில் ஒரு மூதாட்டியை பார்த்து என்னை பெற்றெடுத்த தாயை போலவே இருக்கிறீர்களே என்று தெரிவித்து அந்த மூதாட்டியை பார்த்து கண்ணீர் வடித்திருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு.இவர் மட்டுமல்ல தமிழகத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய எல்லோருமே இது போன்ற சமயத்தில் உணர்ச்சிவசப்படுவது வழக்கமான ஒன்றுதான் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ராசா முதல்வரின் தாயார் தொடர்பாக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததை தாங்கிக்கொள்ள முடியாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது கண்ணீர் வடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.