எச்.ராஜாவின் எச்சரிக்கைக்கு பணிந்த பள்ளிக் கல்வித்துறை! உச்சகட்ட அவமானத்தில் கனிமொழி

Photo of author

By Parthipan K

எச்.ராஜாவின் எச்சரிக்கைக்கு பணிந்த பள்ளிக் கல்வித்துறை! உச்சகட்ட அவமானத்தில் கனிமொழி

தமிழக பள்ளிகளில் சாதி அடையாளங்களை குறிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் கயிறு கட்ட தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் எச்.ராஜாவிற்கு ஆதரவாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தம்முடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் சாதி மற்றும் மத அடையாளங்களை குறிக்கும் வகையில் தங்கள் கைகளில் கயிறுகளை கட்டி வருவது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடந்த 12ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

இதில், “சாதிகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டிவருவதால் பள்ளிகளில் பிரிவினைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமைக் கல்வி அலுவலர் அவ்வாறு இருக்கும் பள்ளிகளைக் கண்டறிந்து அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மேலும் இவ்வாறு பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளைத் தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறையின் இந்த நடவடிக்கைக்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வரவேற்பு தெரிவித்திருந்தார்.

ஆனால், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் இந்த சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, ‘கயிறு கட்டுவது, திலகமிடுவதை தடை செய்வது இந்து விரோத செயல். தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட இது தொடர்பான சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் இதனை எதிர்த்து கயிறு கட்டும் போராட்டம் நடத்தப்படும்’ என்று எச்சரித்தார். இந்த சூழலில் கயிறு கட்டும் விவகாரத்தில் பழைய நிலையே தொடரும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “சாதி அல்லது மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் செயல்பட்டால், பள்ளிகளில் அதனை சரிபார்க்க வேண்டும் என்று ஆதிதிராவிட நலத் துறை சார்பில் அரசாணை பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அது அனுப்பப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அது எங்களின் கவனத்துக்கு வரவில்லை” என்று விளக்கம் அளித்தார்.

மேலும், “தமிழகப் பள்ளிகளில் ஏற்கனவே என்னென்ன நடைமுறைகள் இருக்கிறதோ அதனை பின்பற்ற வேண்டும் என்பது தான் எங்களின் கொள்கை. பள்ளிக் கல்வித் துறையில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் தான் என்றைக்கும் நடைபெற வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது, அமைச்சரின் இந்த அறிவிப்பானது பாஜகவின் எச்.ராஜாவின் கோரிக்கையை ஏற்கும் வகையில், மாணவர்கள் கயிறு கட்டிக்கொண்டு பள்ளிகளுக்கு வரலாம் என்பதைத் தான் உறுதிபடுத்துகிறது.

இது பள்ளி கல்வித்துறையின் நடவடிக்கையை ஆதரித்த திமுக எம்பி.கனிமொழிக்கு உச்ச கட்ட அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்