கிடுக்குப்பிடி போட்ட அமலாக்கத்துறை! சரண்டர் ஆன செந்தில் பாலாஜி!

0
165

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில்பாலாஜி தற்சமயம் அவர் திமுகவில் இணைந்து கரூர் சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழகத்தின் உள்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

அதிமுக ஆட்சியின் சமயத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து 81 பேரிடம் 1.62 கோடி பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். அதோடு செந்தில் பாலாஜி இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் உள்ளிட்டவற்றின் ரசீதுகள் தங்க ஆபரணங்கள், வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பலரிடம் வாங்கப்பட்ட சுய விவரக் குறிப்புகள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தார்கள்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த விசாரணையில் இந்த வழக்கு தமிழக அரசு சார்பாக எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காத காரணத்தாலும், செந்தில் பாலாஜி பணத்தை வாங்கியவர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டதாக குற்றம் சுமத்தியவர்கள் மனு அளித்ததாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கப் பிரிவினர் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்து இருக்கிறார்கள். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையிலும் அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையிலும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அமலாக்கத்துறை முன்பாக நேரில் ஆஜராக தனக்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறைக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாக சென்ற ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து இருந்தார்கள். செந்தில் பாலாஜி மீது போடப்பட்ட 3 வழக்குகளில் ஒரு வழக்கை ரத்து செய்த நிலையில், மீதம் இருக்கின்ற 2 வழக்குகளில் நேரில் ஆஜராவதற்கு தனக்கு ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று செந்தில் பாலாஜி அமலாக்கத் துறைக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Previous articleமுன்னாள் அமைச்சர் போட்ட புது குண்டு! அதிர்ச்சியில் திமுகவினர்!
Next articleசெப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்குகிறது பள்ளிகள்! அமைச்சர் அதிரடி பேட்டி!