அமைச்சர் சேகர்பாபு: மழைக்காலத்தின் அடுத்த நடவடிக்கை! இனி அனைத்து மக்களுக்கும் கோவில்கள் மூலம் இலவச உணவு!
தற்பொழுது தமிழகம் எங்கும் பருவமழையால் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்களின் நடைமுறை வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. அதிக மழை நீர் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்து வருகின்றனர். அந்த வகையில் மக்களின் தேவைகளை இச்சமயத்தில் நிறைவேற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளார். பருவமழை காரணமாக பல மக்கள் ஆங்காங்கே உணவு கிடைக்காமல் இருப்பர்.இந்நிலையை போக்கவே முக்கிய திருக்கோவில்களில் அன்னதானம் வழங்கப்படும். மக்கள் அதனை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் விரிவாக பேசுகையில், மக்களின் அறம் சார்ந்த துரை தான் இந்து சமய அறநிலையத்துறை.
இந்த இயற்க்கை சீற்ற சமயத்தில் மக்களின் குறைகளை தீர்க்கவே இந்த உணவு தயாரிப்பு ஏற்பாடு செய்துள்ளோம் என கூறினார். அந்த வகையில் சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி இதனை தொடங்கியும் வைத்தார். இக்கோவிலை தொடர்ந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.