பெண்களுடன் குத்தாட்டம் போட்ட அமைச்சர் – வைரலாகும் வீடியோ..!

Photo of author

By CineDesk

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து நடனம் ஆடி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அமைச்சர், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று கெம்பனூர், அட்டுக்கல் உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரித்தார். அட்டுகல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சரின் பிரச்சாரத்தின் இடையே சில பழங்குடியின பெண்கள் பாரம்பரிய இசையை இசைத்தும், நடனம் ஆடியும் பிரச்சாரத்தை கலைக்கட்ட வைத்தனர்.

அப்பொழுது அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் பழங்குடியின பெண்களுடன் இணைந்து இசைக்கு ஏற்ப நடனம் ஆடினார். அதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் அமைச்சர் பகிர்ந்தார்.

https://twitter.com/SPVelumanicbe/status/1376478131591147524