அமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து அறிவிப்பு!!

Photo of author

By Parthipan K

அமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து அறிவிப்பு!!

Parthipan K

Updated on:

அமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து அறிவிப்பு!!

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான  தேர்வு சமீபத்தில் நடைபெற்று அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி தமிழ்நாட்டில் 1.40 லட்சம் மாணவர்கள் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார்கள். அந்நிலையில் தேர்வு எழுதிய மாணவர்களில் 78,693 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 65,823 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத 65 மேற்பட்ட  மாணவர்களுக்கு  கட்டாயம்  உளவியல் ஆலோசனை வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சுப்பிரமணியன்  அந்த மாணவர்களுக்கு  உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை நேற்று துவங்கி வைத்தார். பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு  அவர் அளித்த பேட்டியில் சென்னை டி.எம்.எஸ்  வளாகத்தில் 104 மற்றும் 144516 என்ற எண்களில் மனநில ஆலோசனை வழங்கப்பட்டது  என்று அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி நீட் தேர்வு எழுதியவுடன் 54374  மாணவர்களுக்கும் இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு மனநல ஆலோசனை வழங்கும் போது இதில் 177 மாணவர்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தது கண்டறியப்பட்டதாகவும் அவர்களுக்கும் உள்ளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதன்படி தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து  மாணவர்களின் முழு விவரங்களும் கேட்கப்பட்டு அவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மாணவர்கள் பெற்றோர்கள் இருவருக்குமே இந்த ஆலோசனை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.