சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த சூப்பர் திட்டங்கள்!
சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களுக்காக இரண்டு சூப்பரான திட்டங்களை அறிவித்துள்ளார்.
அமைச்சரான பின்உதயநிதி ஸ்டாலினுக்கு இது முதலாவது சட்டசபை கூட்டத் தொடராகும். இதில் பேசிய அவர் நிறைய திட்டங்களை அறிவித்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவரிடம் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, திருப்பூரில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் கால்பந்து தடகள ஓடுபாதை மற்றும் உடற்பயிற்சி கூடத்துடன் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி 60% நிறைவடைந்து விட்டது. சுமார் 18 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிவடைந்து விடும். மேலும் அந்த மைதானத்தை தானே நேரில் வந்து திறந்து வைப்பதாகவும் கூறினார். அடுத்து பேசிய அவர் சிலம்பம், கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை உள்ளடக்கிய முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டிகள் ஜூன் மாத இறுதிக்குள் உலகமே வியக்கும் வண்ணம் தமிழ்நாட்டில் முடிக்க பெறும். மேலும் தமிழகத்தில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போன்று உலக கபடி போட்டியையும் சென்னையில் நடத்துவதற்கு உரிய அனுமதியை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.