அமைச்சர் கொச்சை பேச்சு இதை அப்படியே விட முடியாது!! கோர்ட் போட்ட அதிரடி!!

Photo of author

By Rupa

அமைச்சர் கொச்சை பேச்சு இதை அப்படியே விட முடியாது!! கோர்ட் போட்ட அதிரடி!!

Rupa

Minister's dirty talk.. We can't let this go!! Court action!!

DMK Ponmudi திமுக அமைச்சர் பொன்முடி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பொது நிகழ்ச்சி ஒன்றில் சைவம் வைணவம் குறித்தும் விலைமாது பெண்களை அவதூறாக ஒப்பிட்டும் மிகவும் கொச்சையாக பேசினார். இவர் அவ்வாறு பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக ஸ்டாலின் இவரின் பொறுப்புத் துறையை பறித்து உத்தரவிட்டிருந்தார். இவ்வாறு இருக்கையில் இவருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கானது இன்று நீதிமன்றத்தில் அமர்வுக்கு வந்தது.

மேற்கொண்டு இவர் கொச்சையாக பேசிய வீடியோவை திரையிட்டு பொறுப்பை கொண்டிருக்கும் அமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டாமா?? என்று கேட்டுள்ளார். எப்படி இது ரீதியாக யார் வழக்கு தொடுக்கவில்லை?? கட்டாயம் அவர் பேசியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார். அப்படி அமைச்சருக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது அந்த நிர்வாகிகள் மீது தொடரும் என கூறியுள்ளனர்.

இதே போல இவர் அவ்வாறு பேசியதற்கு அவர் மீது ஏதேனும் வழக்கு பதியப்பட்டுள்ளதா என டிஜிபி யை விசாரித்து இன்று மாலைக்குள் கூறும் படி உத்தரவிட்டுள்ளனர். இவர் இப்படி பேசியது மக்கள் மனதில் நேரடியாக சென்றடைந்து விட்டது. அதன்பின் மன்னிப்பு கேட்டு எந்த பயனும் இருக்காது. இது ரீதியாக தற்போது வரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கும் விதமாக உள்ளது. தெரியாமல் அல்ல நன்றாக தெரிந்தே அமைச்சர் இப்படி பேசியுள்ளார்.

இவரை தவிர்த்து அந்த இடத்தில் வேறு யார் இது மாதிரியாக பேசினாலும் குறைந்தபட்சமாவது 50 வழக்குகள் போடப்பட்டிருக்கும். அப்படி இவர் மீது தற்போது வரை வழக்கில்லை. அனைவரும் சட்டத்துக்கு கீழ் தான் மேலானவர்கள் கிடையாது. ஒரு துறையில் எப்படி ஊழலை ஏற்றுக் கொள்ள முடியாதோ, அதை போல் நாகரீகமற்ற பேச்சையும் சகித்து கொள்ள முடியாது. இவரைப் போலவே பல அரசியல் தலைவர்களை எச்சரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததுண்டு என்று சுட்டிக்காட்டி பேசினார்.

முன்னதாகவே ஒரு வழக்கில் அவருக்கு தண்டனை வந்தும் அது நிலுவையில் உள்ளது. மேற்கொண்ட அதனை உதாசனம் படுத்தும் வகையில் இப்படி பேசி வருவது மிகவும் தவறு. இதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் ரத்து செய்யலாம் என்று தெரிவித்தார்