சதய விழாவை புறக்கணித்த அமைச்சர்கள்! அப்செட்டில் விழா குழுவினர் மற்றும் மக்கள்!

0
185

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டமைத்த மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நேற்று தஞ்சை உடையாளூரில் மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது. தமிழக அமைச்சர்கள் யாரும் பங்கேற்றுக் கொள்ளாமல் இந்த விழாவை புறக்கணித்தனர்.

ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்பதற்காக சதய விழா குழு சார்பாக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் அமைச்சர்கள் யாரும் வருகை தரவில்லை. அமைச்சர் சேகர்பாபு மழையின் காரணமாக வரவில்லை என்று கூறப்பட்டது. காலை 11:15 மணியளவில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக கூறப்பட்டது.

அதன் பின்னர் 11.20 மணியளவில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக மீண்டும் தெரிவிக்கப்பட்டது. செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் கும்பகோணம் அருகே தனியார் அமைப்பு சார்பாக நடந்த விழாவில் பங்கேற்று கொண்டனர்.

ஆனால் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சட்டசபை உறுப்பினர், மேயர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பெரிய கோவில் பக்கம் தலையை கூட நீட்டாமல் சென்று விட்டார்கள். ஆட்சியில் இருப்பவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெரிய கோவிலுக்கு வந்தால் பதவி பறிபோய்விடும் என்ற காரணத்தை முன்வைத்து அவர்கள் விழாவை புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சேகர்பாபு உள்ளிட்டோர் இந்த விழாவை புறக்கணித்தது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

ஏனெனில் அவர்கள் இருவரும் தஞ்சை பெரிய கோவிலுக்கு வராவிட்டாலும் கூட ராஜ ராஜ சோழனின் நினைவிடம் அமைந்திருக்கும் உடையாளூருக்கு வந்து அங்கே அந்த விழாவில் பங்கேற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் இரண்டு அமைச்சர்களுமே அதை செய்யாமல் இந்த விழாவை புறக்கணித்தது விழா குழுவினரையும் மற்றும் மக்களையும் கோபமடைய செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous articleமூன்றே நாளில் பிரசவ தழும்பு மறைந்துவிடும்! 100% ரிசல்ட்..உடனே ட்ரை பண்ணுங்க!!
Next articleதொடர்ந்து பெய்து வரும் கனமழை! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?