தொடர்ந்து பெய்து வரும் கனமழை! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

0
73

தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

ஆகவே டிசம்பர் மாதம் 4ம் தேதி இன்று ஒரு நாள் மட்டும் சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் மழையின் காரணமாக, 4 தாலுகாவில் மற்றும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் தாலுகாவில் இருக்கின்ற பள்ளிகளுக்கு மற்றும் இன்று ஒரு நாள் விடுமுறை என்று ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்திருக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையின் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை என்று அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் கனமழையின் காரணமாக, இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தம்புராஜ் அறிவித்திருக்கிறார். ஆனால் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று புதுவையிலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.