எனது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் பதவி தான் எனக்கு பரிசு? உதயநிதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!
நாளை உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வரவுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் இவர் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாநகர பேருந்துகளில் பேருந்து நிறுத்தம் கூறும் ஒலிபெருக்கி திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தொடக்கம் விழாவானது போக்குவரத்துறை அமைச்சர் சா சி சிவசங்கர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
பயணிகள் பயன்பெறும் வகையில் நிறுத்தம் பெயரை கூறும் தானியங்கி கருவியை முதலில் 500 பேருந்துகளில் பொருத்தியுள்ளனர். இதனின் அடுத்த கட்டமாக 1000 பேருந்துகளில் இக்கருவியை பொருத்த ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த தானியங்கி கருவியானது அடுத்த நிறுத்தம் வருவதற்கும் இரண்டு நிமிடத்திற்கு முன்பே ஒலிக்க ஆரம்பித்து விடும். வெளியூர் பயணிகள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கூறும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
இதனால் பேருந்தில் ஏறும் பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய முடியும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோருக்கு இது மிகப்பெரிய பயனுள்ள திட்டமாக இருக்கும். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், அனைத்து அரசு பேருந்துகளிலும் பேருந்து நிறுத்தத்தை கூறும் தானியங்கி கருவியை பொறுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த வகையில் தற்போது 500 பேருந்துகளில் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
நாளடைவில் இதர மாநகரப் பேருந்துகளிலும் பொருத்தப்படும் என்று கூறினார். அங்க இருந்த பத்திரிக்கை நிருபர்கள் உதயநிதியிடம் நாளை உங்கள் பிறந்தநாள் வருவதையொட்டி நீங்கள் அமைச்சராக வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி, நான் அமைச்சராக போவது முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்று கூறினார்.இதை வைத்து பார்க்கையில் ஸ்டாலின் அவரின் மகனின் பிறந்த நாளுக்கு பரிசாக அமைச்சர் பதவி தர வாய்ப்புள்ளதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.