தமன் இசையில் மிரண்ட தளபதி விஜய்! ஹிட்டடிக்க போகும் தளபதி 65 பட பாடல்கள்!

Photo of author

By Parthipan K

தளபதி விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் தளபதி 65ல் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து இருக்கின்றனர்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இந்த படத்திற்கான ஹீரோயின் யார் என்று இன்னும் வெளிவரவில்லை.ஓர் நற்செய்தி என்னவென்றால் தளபதி 65 படத்திற்கான இசையமைப்பாளரை தேர்வு செய்து விட்டார்களாம். 

தெலுங்கு சினிமாவின்  பிரபல  இசையமைப்பாளர் தமன் ஆவார். இவர் சமீபத்தில் வெளிவந்த அளவைகுண்டபுரம்லோ என்ற படத்தின் பாடல்கள் மூலம் உலகப் பெயர் பெற்றார்.இவரை தளபதி 65 படத்திற்கு இசையமைப்பாளராக தேர்ந்தெடுத்தது பல இசையமைப்பாளர்களை பொறாமைப்பட வைத்துள்ளது.

தளபதி 65 படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லாதபோதும் அனைத்து வேலைகளும் அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கின்றன என்ற செய்தியும் பரவலாக பேசப்படுகிறது. மேலும் இந்த படம் ஒரு அதிரடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 சமீபத்தில் தமன் தளபதி 65 படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை பதிவு செய்து அதனை தளபதி விஜய் மற்றும் முருகதாஸுக்கு அனுப்பினாராம். இருவருக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்துவிட்டதாம். தளபதி விஜய் அந்த பாட்டை கேட்டு துள்ளிக்குதித்து மகிழ்ந்தாராம்.

தளபதி 65 பட ஆல்பம் மிகப்பெரிய சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. தளபதி 65 படம் அவரது ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.தமன் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த புட்ட பொம்மா பாடல் சாதனையை தளபதி 65 படத்தின் பாடல் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் பேசுகின்றன.