60 வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம்!! வரலாற்று சாதனை படைத்த பெண்!!
அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற அழகுப் போட்டியில் 60 வயது பெண் ஒருவர் கலந்து கொண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அர்ஜெண்டினா நாட்டில் 2024ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் புயெனஸ் ஏரஸ் அழகுப் போட்டி நடைபெற்றது. இந்த அழகுப் போட்டியில் 60 வயது நிரம்பிய அலெஜன்ட்ரா மரிசா ரோட்ரிகியுஸ் அவர்கள் கலந்து கொண்டார். இவர் அர்ஜென்டினா நாட்டில் வழக்கறிஞராகவும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற 2024ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் புயெனஸ் ஏரஸ் அழகுப் போட்டியில் 60 வயது நிரம்பிய அலிஜன்ட்ரா மரிசா ரோட்ரிகுயிஸ் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்று மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்றுள்ளார். அலிஜன்ட்ரா மரிசா ரோட்ரிகுயிஸ் அவர்களின் இந்த வெற்றி வரலாற்று சாதனையாகவும் வரலாற்றில் முக்கிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. 60 வயதில் மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற சாதனையை அலிஜன்ட்ரா மரிசா ரோட்ரிகுயிஸ் அவர்கள் படைத்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்ற 60 வயது பெண்மணி அலிஜன்ட்ரா மரிசா ரோட்ரிகுயிஸ் அவர்கள் “இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். 60 வயதில் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பெண்ணாக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது. அழகுக்கு வயது வரம்பு இல்லை. தடைகளை தாண்டி முன்னேற முடியும் என்பதை நான் எல்லா பெண்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.