பாகிஸ்தானிலிருந்து சென்னையை குறிவைக்கும் ஏவுகணை!! எச்சரித்த பாகிஸ்தான்!!

Photo of author

By Rupa

பாகிஸ்தானிலிருந்து சென்னையை குறிவைக்கும் ஏவுகணை!! எச்சரித்த பாகிஸ்தான்!!

Rupa

missile-targeting-chennai-from-pakistan-pakistan-warned

India Pakistan: காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது இடங்களை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்தியா வின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்பதாக பாகிஸ்தான் பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானின் தாக்குதலை எதிர்நோக்கி இந்தியா முழுவதும் இன்று போர் ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதனால் சென்னை ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு விடுப்பு அளித்துள்ளனர். அணுமின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களை பாகிஸ்தான் குறி வைக்க அதிக வாய்ப்புள்ளதால் அங்கு இருப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் இந்தியா பாகிஸ்தானின் 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பகுதியில் ஏவுகணை கொண்டு தாக்கியதில், பதிலடியாக சென்னையை தாக்க அதிக வாய்ப்புள்ளது என கூறுகின்றனர்.

ஏனென்றால் பாகிஸ்தானிடம் 1500 கிலோமீட்டர் இலக்கை தாக்கக்கூடிய சாஹீன் 2 மற்றும் அபபீல் போன்ற ஏவுகணைகள் உள்ளது. இதன் மூலம் சென்னையை எளிமையாக தாக்கலாம். ஆனால் இந்த ஏவுகணைகள் ஏவப்படும் நேரத்தில் அதனை தடுக்கும் விதமாக இந்தியாவிடம் பல தொழில்நுட்பம் வாய்ந்த ஆயுதங்கள் இருப்பதாகவும், அதனை திருப்பி வேறு திசைக்கு மாற்ற வழி உள்ளதாகவும் கூறுகின்றனர்.

குறிப்பாக பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதலை நடத்தலாம் என்பதால் தமிழகத்தில் அணுமின் நிலையம், சென்னை துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.