ஆதார் கார்டை மிஸ் பண்ணிட்டிங்களா? இதை உடனே செய்தால் திரும்ப பெறலாம்!!

Photo of author

By Rupa

ஆதார் கார்டை மிஸ் பண்ணிட்டிங்களா? இதை உடனே செய்தால் திரும்ப பெறலாம்!!

இந்திய நாட்டில் வாழும் அனைத்து குடிமகன்களுக்கும் தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட கூடிய ஆதார் அவசியமாகும்.அரசாங்கத்தில் இருந்து பெறப்பட கூடிய சேவைகளையும் பெற முக்கிய ஆவணமாக ஆதார் உள்ளது.

ஆதார் பயன்படுத்தாத இடமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.வங்கி கணக்கில் தொடங்குவதில் இருந்து பயண டிக்கெட் முன்பதிவு செய்வது வரை ஆதார் அவசியமாகிறது.அரசாங்கம் வழங்கக் கூடிய இந்த முக்கிய ஆவணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.ஒருவேளை ஆதார் அட்டை தொலைந்து விட்டால் அதை எப்படி திரும்ப பெறுவது என்று அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

முதலில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்(UIDAI) இணையதள பக்கமான https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்பதை பார்வையிடவும்.பிறகு அதில் ஆதார்/EID என்பதை கிளிக் செய்து தங்கள் ஆதார் கார்டில் பதிவாகி இருந்த பெயர்,மொபைல் நம்பர் போன்ற விவரங்களை என்டர் செய்யவும்.

இவ்வாறு செய்த பின்னர் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.அந்த எண்ணை பதிவு செய்து பின்னர் தங்களுக்கான விண்ணப்பப் படிவம் தோன்றும்.அதை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் உங்களுடைய ஆதார் நம்பர் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்படும்.அதேபோல் ஆதார் பதிவு மையத்திற்கு சென்று சில வழிமுறைகளை மேற்கொண்டு தொலைந்து போன ஆதார் விவரத்தை திரும்ப பெற முடியும்.இந்தியாவில் தனி நபர் ஒருவருக்கு ஆதார் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளதால் அதை பாதுகாப்பது அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.