பல உயிர்களை காவு வாங்கிய நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி:! தேர்வு முடிவுகள் நீக்கம் !!

Photo of author

By Parthipan K

இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி மற்றும் அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக நீட் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய தேசிய தேர்வு முகமை நேற்று இரவு தனது அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

nta.ac.in என்ற இணையதளம் மூலம் வெளிவந்த தேர்வு முடிவுகளில் சில குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதனை தற்போது கண்டறிந்துள்ளனர்.

திரிபுரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருப்பதனை கண்டறிந்துள்ளனர் .மேலும் , உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களை விட , தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் குறைவாக இருப்பதனால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இதனை சரி செய்து விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமே அறிவித்துள்ளது. மேலும், தனிப்பட்ட தேர்வு முடிவுகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது .மாநிலங்களில் வெளியிடும் புள்ளி விவரங்களில் குளறுபடி காரணமாக தற்போது நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.