வீட்டு பூஜை அறையில் செய்யக் கூடாத தவறுகள்!! அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!!

0
151

நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் கடவுள் படங்கள் மற்றும் பூஜை பொருட்களை அதிகளவு வைத்திருக்கிறோம்.சிலர் வாஸ்து சாஸ்திரம் தெரியாமல் பூஜை அறையில் பல விஷயங்களை இன்று வரை தவறாக செய்து வருகின்றனர்.

அவை என்ன என்பது குறித்து இங்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.இதை அறிந்து கொண்டு இனி இந்த தவறுகளை செய்யாமல் இருங்கள்.

பூஜை அறையில் வைக்கும் வெற்றிலையில் காம்பை மட்டும் நீக்கிவிட வேண்டும்.வெற்றிலை நுனியில் சரஸ்வதி மற்றும் காம்பில் மூதேவி வாசம் செய்கிறார்.இதனால் மூதேவி வாசம் செய்யும் காம்பை கிள்ளிவிட்டு வெற்றிலையை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.

அதேப்போல் பூஜை அறையில் பிரசாதம் வைக்க பயன்படுத்தும் வாழை இலையின் நறுக்கப்பட்ட பகுதி கடவுள் படத்திற்கு வலப்பக்கமாக இருக்குமாறு வைக்க வேண்டும்.காலையில் விளக்கேற்றுவது போல் மாலையிலும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.

பெண்கள் தலைவிரி கோலத்தில் பூஜை அறையில் கடவுளை வழிபடக் கூடாது.தலைவிரிக் கோலத்தை கண்டால் லட்சுமி தேவி வீட்டில் குடியேற மாட்டார்.

பூஜை அறையில் வாடிய பூக்கள்,மாலைகள்,அழுகிய பழங்கள் மற்றும் காய்ந்த எலுமிச்சை இருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.செல்வங்களை அள்ளித் தரும் கடவுளின் படங்கள் வீட்டு வாசலை பார்த்தவாறு மாட்டி வைக்கக் கூடாது.வீட்டு பூஜை அறையில் உள்ள கடவுள் படங்கள் கிழக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும்.அதேபோல் வடக்கு திசை பார்த்தபடி மாட்டி வைக்கலாம்.ஆனால் தெற்கு திசை பார்த்தவாறு மட்டும் மாட்டி வைக்கக் கூடாது.

கடவுளுக்கு படைக்க உள்ள பிரசாதங்களை எவர் சில்வர் பாத்திரத்தில் அப்படியே வைக்கக் கூடாது.பாத்திரத்தில் வாழை இலையை வைத்த பிறகு தான் பிரசாதம் வைத்து படைக்க வேண்டும்.

வீட்டு பூஜை அறையில் அரிசி மாவில் சிறு கோலம் போட்டு அதன் நடுவில் மண் விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும்.வீட்டு பூஜை அறையை அடைத்தவாறு படங்களை மாட்டி வைக்கக் கூடாது.ஒவ்வொரு கடவுள் படத்திற்கும் இடையே சிறு இடைவெளி இருக்க வேண்டும்.மாதவிடாய் காலத்தில் பெண்கள் பூஜை அறைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.அசைவ உணவுகளை உட்கொண்டவர்கள் பூஜை அறைக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்.

Previous articleகிரிக்கெட் வீரர் மற்றும் குடும்பத்தினருக்கு பிசிசிஐ போட்ட புதிய விதி
Next articleதினமும் மலச்சிக்கலுடன் போராட்டமா? இதற்கு நிரந்தர தீர்வு இந்த பொருள் மட்டுமே!!