அரிசியுடன் இதனை கலந்து பூசுங்கள்!! 3 நாட்களில் படர்தாமரை முதல் தேமல் வரை அனைத்தும் நீங்கும்!!

Photo of author

By Sakthi

அரிசியுடன் இதனை கலந்து பூசுங்கள்!! 3 நாட்களில் படர்தாமரை முதல் தேமல் வரை அனைத்தும் நீங்கும்!!

நம்மில் சிலருக்கு படர் தாமரை, தேமல் போன்ற தோல் நோய்கள் இருக்கும். இதனால் தினமும் அரிப்பு, எரிச்சல் போன்று ஏற்படும். அவ்வாறு வேதனையை தரக்கூடிய இந்த தோல் சார்ந்த நோய்களை குணப்படுத்த அருமையான ஒரு வைத்திய முறையை இந்த பதிவில் காணலாம்.

 

இந்த பதிவில் சொல்லப்படும் இந்த மருத்துவ முறையை படர் தாமரை, தோமல், தோல் அலர்ஜி போன்ற நோய்களுக்கு மட்டுமில்லாமல் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும் பயன்படுத்தலாம்.

 

தேமல், படர்தாமரை போன்ற தோல் நோய்களை சரி செய்யும் மருந்தை தயார் செய்யும் முறை…

 

இந்த மருந்தை தயார் செய்ய கார்போக அரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அரிசியை தேவையான அளவு எடுத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்சியில் போட்டு அரைத்துக் பொடியாக எடுத்துக் கொள்ளவும்.

 

பிறகு இந்த பொடியில் குப்பைமேணி இலைப் பொடியை 2 ஸ்பூன் அல்லது 3 ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை காற்று புகாத கண்ணாடி ஜாரில் போட்டு தேவைப்படும் பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

இந்த பொடியை பயன்படுத்தும் முறை…

 

கலந்து வைத்துள்ள இந்த பொடியில் இருந்து தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டில் ஏதாவது ஒன்றை சேர்த்து இதை நன்கு கலக்கிக் கொள்ளவும்.

 

பிறகு படர்தாமரை போன்று தோல் நோய்கள் உள்ள இடத்தில் இதை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதற்கு முன்பு படர்தாமரை, தோல் நோய்கள் உள்ள இடத்தை நன்கு சோப்பை வைத்து சுத்தம் செய்யவும். பிறகு இந்த பொடியை தோல் நோய்கள் உள்ள இடத்தில் தேய்த்து 20லிருந்து 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். இது மாதிரி ஒரு நாளுக்கு இரண்டு முறை செய்ய செய்ய வேண்டும். இதை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் படர்தாமரை, தேமல், தோல் அலர்ஜி போன்ற தோல் நோய்கள் குணமடைந்து விடும்.