இளம் பருவத்தில் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனையாக முகப்பரு உள்ளது.முகப்பரு வந்தால் இயற்கை அழகு முழுமையாக குறைந்துவிடும்.ஹார்மோன் ஏற்றத்தாழ்வு,ஊட்டச்சத்து குறைபாடு,எண்ணெய் பசை சருமம் போன்ற காரணங்களால் முகப்பருக்கள் தோன்றுகிறது.
முகப்பருக்களை மறைய வைக்கும் வீட்டு வைத்தியங்கள்:
தீர்வு 01:-
1)தேன்
2)எலுமிச்சை
முகப்பருக்கள் நீங்க சுத்தமான தேன் தேவைப்படுகிறது.ஒரு பவுலில் 1/2 ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கை விடாமல் கலக்கவும்.பிறகு இதை பருக்கள் மீது அப்ளை செய்து ட்ரையாகும் வரை விட்டு பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி முகத்தை வாஷ் செய்யவும்.இவ்வாறு செய்வதால் ஒரே இரவில் முகப்பருக்கள் நீங்கிவிடும்.
தீர்வு 02:
1)ரோஸ் வாட்டர்
2)பூண்டு பல்
இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கி இடித்து ஒரு பவுலில் போடவும்.பிறகு அதில் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.பிறகு ஒரு காட்டன் பஞ்சை அதில் நினைத்து முகப்பருக்கள் மீது ஒத்தி எடுக்கவும்.இப்படி செய்தால் ஓரிரு தினங்களில் முகப்பருக்கள் மறைந்துவிடும்.
தீர்வு 03:
1)கற்றாழை ஜெல்
2)மஞ்சள் பொடி
கற்றாழை மடலில் இருந்து இரண்டு ஸ்பூன் அளவு பிரஸ் ஜெல் எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து மிக்ஸ் செய்யவும்.இந்த க்ரீமை முகப்பருக்கள் மீது தடவி வந்தால் சில நாட்களில் அவை மறைவதை பார்க்க முடியும்.
தீர்வு 04:
1)வெள்ளரிக்காய்
2)தேன்
ஒரு துண்டு வெள்ளரிக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்ட்டாகவும்.பிறகு இதை ஒரு பவுலில் போட்டு சிறிது தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும்.20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும்.தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் முகப் பருக்கள் அனைத்தும் மறைந்துவிடும்.