பொடுகு தொல்லை அடியோடு நீங்க எலுமிச்சை தோலுடன் இதை சேர்த்து 1 முறை தலையில் தடவுங்கள்!!

Photo of author

By Rupa

பொடுகு தொல்லை அடியோடு நீங்க எலுமிச்சை தோலுடன் இதை சேர்த்து 1 முறை தலையில் தடவுங்கள்!!

Rupa

Mix this with lemon peel and apply it once on your scalp to get rid of dandruff completely!!

முடி உதிர்வு,பொடுகு பிரச்சனையை வீட்டு வைத்திய முறையில் சரி செய்வது எப்படி??

பலருக்கும் முடி உதிர்வு பொடுகு பேன் அரிப்பு, புழுவெட்டு போன்ற பிரச்சனைகள் காணப்படும். அவ்வாறு இருப்பவர்கள் கடைகளில் கிடைக்கும் பாராபின் சல்பேட் சேர்த்த ஷாம்புகள் வாங்கி பயன்படுத்துவதால் எந்த ஒரு பயனும் கிடைக்காது. மாறாக வீட்டிலே அதற்கேற்றார் போல் பொடி செய்த தடவி வர நல்ல மாற்றத்தை காண முடியும். இயற்கை முறையில் சித்த வைத்தியத்தை மேற்கொள்ளும் பொழுது நிரந்தர தீர்வும் காணப்படும்.

தேவையான பொருட்கள்:
மருதாணி 1 கைப்பிடி
வேப்பிலை 1 கைப்பிடி
சிவனார் வேம்பு 1 கைப்பிடி
கோரைக்கிழங்கு சிறியது
செம்பருத்தி பூ 5
எலுமிச்சை தோள் 5

செய்முறை:
இவற்றையெல்லாம் நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு நன்கு காய வைத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனை பொடி செய்து வாரத்தில் இரண்டு முறை தலையில் தேய்த்தும் நன்றாக ஊற விட வேண்டும்.
பின்பு சீவக்காய் அல்லது ஷாம்பு போட்டு குளித்து வர தலையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.