கலைஞர் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சென்னையில் பேரணிக்கு ஏற்பாடு செய்தது போன்ற ஒரு தவறை இந்த முறை செய்து விடக்கூடாது மதுரையில் கூட்டத்தை கூட்டி நாம் யார் என்பதை காட்ட வேண்டும் என்ற முடிவிற்கு வந்து இருக்கின்றார் மு.க. அழகிரி
நாடாளுமன்றத் தேர்தலில் ஒதுங்கியிருந்த அழகிரி சட்டசபைத் தேர்தலில் நிச்சயமாக அப்படி இருக்க மாட்டார் என்று ஊடகங்கள் சில மாதங்களாகவே கூறிவருகின்றன அதனை உறுதிப்படுத்தும் விதமாக சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய பங்கு நிச்சயமாக இருக்கும் என்று தெரிவித்து அதிரடி அரசியலை தொடங்கியிருக்கிறார் மு.க. அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் அழகிரி அதன்பின்பு திமுகவில் இணைவதற்காக அவர் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
கருணாநிதி மறைவுக்குப் பின்னர் மூத்த மகனாக அழகிரி செய்ய வேண்டிய கடமைகளை கூட அவரால் செய்ய இயலவில்லை கலைஞருடைய மறைவிற்கு பின்னராவது கட்சியில் தனக்கான முக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் அழகிரி ஆனால் ஸ்டாலின் அழகிரி மீண்டும் கட்சிக்குள் அனுமதிப்பது ஆபத்து என நினைத்து அந்த விஷயத்தில் மிகவும் உஷாராகவே இருந்துவந்தார் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி அழகிரி தன்னுடைய பலத்தை காட்டுவதற்கு முயற்சி செய்தார் ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் கூடவில்லை.
அதன் பின்னர் அரசியல் பக்கமே வரவில்லை என்றுதான் கூறவேண்டும் ஆனால் அப்போது அழகிரி பதுங்கியது சட்டசபை தேர்தலின்போது வாழ்வதற்காக தான் என்பது இப்போது தெரியவந்திருக்கின்றது ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆகி விடக்கூடாது என்பதுதான் அழகிரி உடைய திட்டம் என்று தெரிவிக்கிறார்கள் அதேபோல திமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்கள் தான் இப்போது அழகிரியை பின்னாலிருந்து இயக்குவதாகவும் தெரிவிக்கின்றார்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொடைக்கானலில் பாஜகவின் முக்கிய புள்ளி ஒருவர் அழகிரியை சந்தித்து பேசி இருக்கின்றார்.
அழகிரியை பாஜகவில் இணையுமாறு அந்த முக்கிய புள்ளி ஆனால் அதை மீறி ஒரு சிலர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறேன் ஆனால் இப்போது அப்படி விருப்பம் எதுவும் கிடையாது என்றும் தெரிவித்தார் அதேநேரம் அரசியலிலிருந்து விலகும் mமுடிவிலும் நான் இல்லை என்றும் தெரிவித்து இருக்கின்றார் சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு எதிரான நிலைபாட்டை எடுத்து ஸ்டாலினை முதல்வராகாமல் தடுப்பது தான் தன்னுடைய நோக்கம் என்று தெரிவித்திருக்கின்றார்.
அதன் அடிப்படையில்தான் இப்போது பாஜக பின்னால் இருந்து திமுகவிற்கு எதிராக தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிக்க அழகிரி திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள் அடுத்த மாதம் அழகிரியின் பிறந்தநாள் வருகின்றது அந்த நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உதயநிதி சம்பந்தமாக பல புகார்களை தெரிவித்து தமிழக அரசியல் களத்தை அதிரவைத்த அழகிரி திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள் அதேபோல அன்றைய தினம் தன்னுடைய ஆதரவாளர்கள் அனைவரையும் மதுரைக்கு அழைத்து தென் மாவட்டங்களில் தற்போது தான் தான் ராஜா என்பதை காட்டவும் அழகிரி தயாராகி வருவதாக சொல்கிறார்கள்.
அதோடு தென்மாவட்டங்களின் திமுகவின் கட்டமைப்பு அழகிரிக்கு மிக நன்றாகத் தெரியும் எனவே அங்கே தற்போது திமுகவில் பொறுப்பில் இருப்பவர்கள் தொடங்கி வேட்பாளர் ஆகும் வாய்ப்பு இருப்பவர்கள் வரை அனைவருமே ஒரு நேரத்தில் அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர்கள்தான் ஆகவே அவர்களுடைய வரவு-செலவு போன்றவற்றில் ஆரம்பித்து அவர்கள் எங்கே அவர்கள் எங்கே போவார்கள் என்று அனைத்தும் அழகிரிக்கு நன்றாக தெரியும் என்று சொல்கிறார்கள் இவற்றையெல்லாம் வைத்து தென் மாவட்டங்களில் திமுகவிற்கு குடைச்சல் கொடுத்து அதிமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம் என்று சொல்கிறார்கள் ஆனால் இதனை ஸ்டாலின் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கின்றது.