நீங்கள் இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டது பன்முகத்தன்மையின் அடையாளம்! ரிஷி சுனகுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருகின்ற நிலையில், அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கிறது. சொந்த கட்சியில் அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக, போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.

இதில் லிஸ்ட்டிரஸ் மற்றும் இந்திய வம்சாவழியைச் சார்ந்த ரிஷி சுனக் உள்ளிட்டோர் போட்டியிட்ட நிலையில், லிஸ்ட்ரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் ஆனால் அங்கே நிலவி வரும் பொருளாதார சிக்கலை சமாளிக்க இயலாமல் ஆட்சிக்கு வந்து 45 நாட்களிலேயே தன்னுடைய பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியின் புதிய பிரதமருக்கான போட்டி பரபரப்பாக நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரிஷி சுனக் கட்சியின் அதிக ஆதரவை பெற்று கட்சியின் தலைவராகவும், இங்கிலாந்து நாட்டின் பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று அவரை இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்து நாட்டின் 57வது பிரதமராக நியமனம் செய்தார் இதனை தொடர்ந்து இந்திய வம்சாவழியான ரிஷி சுன க் அவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதலமைச்சர். அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுண்ணத்திற்கு தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தன்னுடைய வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் அதில் ரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துக்கள் நீங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு செல்வது பன்முகத்தன்மைக்கான வெற்றியாகும் அதோடு இது இந்தியா இங்கிலாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என்று நம்புகிறேன் என பதிவு செய்துள்ளார்.