உதயநிதி ஸ்டாலினுக்கு பதவியை தர திமுக நடத்திய உச்சகட்ட நாடகம் அம்பலம்
சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலினின் மகன் என்பதை தவிர வேறு எந்த அடையாளமும் இல்லாமல் இருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த திமுக ஆட்சியில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். அந்த சமயத்தில் திமுக ஆட்சியில் இருந்ததால் தமிழ் திரைத்துறை முழுவதும் தங்களது குடும்ப கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்திருந்தது. நடிப்பு என்றால் என்ன விலை என்று கேட்கும் நிலையில் இருந்த உதயநிதி ஸ்டாலினையும் தங்களது அரசியல் செல்வாக்கால் ஒரு சில படங்களில் நடிக்க வைத்தனர்.
ஒரு சில படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே அரசியல் செல்வாக்கு மற்றும் தங்கள் குடும்பத்தினரின் பணபலம் மூலம் சினிமா தயாரிப்பு, விநியோகஸ்தர் என உதயநிதி ஸ்டாலின் தமிழக திரைத்துறையில் முக்கிய அங்கமாக மாறினார்.அரசியல் செல்வாக்கையும் வாரிசு என்பதையும் தவிர இவருக்கென்று தனித்திறமை ஏதும் இல்லாததால் வழக்கம் போல இவரை அரசியலுக்குள் கொண்டு வர நடிகராக்க செய்த முயற்சி ஓரளவு வெற்றி பெற அடுத்து முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பதவிக்கு வந்து கட்சி சம்பந்தமான நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபட ஆரம்பித்தார்.
ஆரம்பகாலத்தில் அரசியலில் ஈடுபடவும் திமுகவில் பதவியை பெறவும் விருப்பம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த மக்களவை மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போதே இவரை பதவிக்காக தான் பிரச்சாரம் செய்வது போல விளம்பரபடுத்துகின்றனர் என்று மக்கள் தெரிந்து கொண்டனர்.
எதிர்பார்த்தது போலவே உதயநிதி ஸ்டாலினுக்கு மாநில இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என கட்சியில் நிர்வாகிகள் கேட்டதாக பரப்பப்பட்டு தொண்டர்களை நம்ப வைத்தனர். இதை வலியுறுத்தும் விதமாக திருச்சி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களும், திமுகவின் துணை அமைப்புகளும் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றித் தலைமைக்கு அனுப்பிவைத்தன.
இந்நிலையில் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற திமுகவின் பொதுக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் எந்தப் பொறுப்பையும் பதவியையும் எதிர்பார்த்து நான் பிரச்சாரம் செய்யவில்லை என்றும். திமுகவின் கடைக்கோடி தொண்டர்களில் ஒருவன் என்ற ஒரு பொறுப்பு போதும்” என்றும் தனது உச்ச கட்ட நடிப்பை வெளிப்படுத்தினார்.
இதனிடையே அனைவரும் எதிர்பார்த்தது போல இம்மாத இறுதிக்குள் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவின் இளைஞரணிச் செயலாளர் பதவியை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை உறுதி படுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலினுக்காக தான் வகித்து வந்த திமுகவின் இளைஞரணிச் செயலாளர் பதவியிலிருந்து வெள்ளக்கோயில் சாமிநாதன் ராஜினாமா செய்துள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார்கள்.
தமிழக அரசியலில் ஜொலிக்க வேண்டுமென்றால் சினிமா நடிகராக இருக்க வேண்டும் என்று திமுக தலைமை உறுதியாக நம்பியதால் அரசியலுக்கு வர எந்த தகுதியும் இல்லாத உதயநிதி ஸ்டாலின் அவர்களை ஸ்டாலின் வாரிசு என்ற ஒரு காரணத்திற்காக நடிகராக்கி தற்போது அரசியல்வாதியாக்கிவிட்டார்கள்.
கடந்த காலங்களில் பதவியே வேண்டாம் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தது இந்த இளைஞர் அணி செயலாளர் பதவிக்காக போட்ட நாடகம் என்பது மக்கள் மத்தியில் அம்பலமாகி விட்டது.
மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க எங்களது News4 Tamil முகநூல் பக்கத்தையும் ட்விட்டர் பக்கத்தையும் பின்தொடருங்கள்.