தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகமானதை தொடர்ந்தது அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். அதனடிப்படையில் நோய் தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.
ஆனால் சிறிது நாட்கள் குறைந்து வந்த நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது இதனால் மத்திய, மாநில அரசுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்தார்கள்.
இந்த நோய் தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் ஊடுருவியது அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஆனால் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க மறுத்ததன் காரணமாக, ஆரம்பத்தில் இந்த நோய் தொற்று மளமளவென பரவியது.
ஆனால் இந்த நோய் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திண்டாடி வந்த சூழ்நிலையில், இந்தியாவில் இந்த நோய் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் இருக்கக்கூடிய மக்களுக்கு இலவசமாக மாநில அரசுகளால் செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த விதத்தில் இந்தியாவில் சீனாவிற்கு அடுத்தபடியாக நூறுகோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இது ஒரு உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. இதனையொட்டி நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு தமிழக அரசு வாரம் தோறும் மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தி மாநிலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மற்றும் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்றிருக்கிறார்கள்.
இந்த நிலையில், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையமும் ஒன்றிணைந்து எலும்பு சாதனம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நேற்றைய தினம் நடைபெற்ற இருக்கிறது. இந்த பயிற்சி பட்டறையை மருத்துவ துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அந்த சமயத்தில் அவர் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்தியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார், அந்த சமயத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து ஒரு சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
தடுப்பூசி போட்டுக் கொள்வது தவறான விஷயம் கிடையாது எனவும், முழுமையான அளவில் விழிப்புணர்வு உண்டாகும் தமிழ் நாட்டில் தற்சமயம் 6000000 தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பொதுமக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக சுமார் 57 லட்சம் பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார் என தெரிவித்திருக்கிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம்.
உலகம் முழுவதும் நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஆகவே தமிழ்நாட்டில் பாதிப்பு தற்சமயம் குறைந்து இருக்கிறது என தடுப்பூசி போடாமல் நிறுத்துவது, பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருப்பது, உள்ளிட்டவற்றை பொதுமக்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்.