உளவுத்துறையில் நிபுணரான ஒருவரை தமிழக ஆளுநராக நியமனம் செய்த மத்திய அரசு! உஷாரான முதலமைச்சர் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் திடீரென்று பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டு இருக்கிறார்.இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்திருக்கிறது மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட வித்யாசாகர் ராவ் தொடர்ந்து இரண்டு ஆண்டுகாலம் தமிழகத்தின் ஆளுநராக செயல்பட்டு வந்தார். ஆனால் அவர் முழு நேர ஆளுநராக மராட்டிய மாநிலத்தில் தான் பணிபுரிந்து வந்தார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக தான் தமிழக ஆளுநர் என்ற பொறுப்பை வழங்கியிருந்தது மத்திய அரசு.

அதற்கு அவர் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில் தமிழகத்தில் அதிமுகவிற்கு மிகப்பெரிய பிரச்சனை இருந்தது. இதன் காரணமாக, அடிக்கடி அந்த பிரச்சனைகளை பேசி தீர்ப்பதற்காக மராட்டியத்தில் இருந்து வித்யாசாகர் ராவ் தமிழகத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அவருக்கு மிகப்பெரிய சிரமமாகவும் காணப்பட்டது.இந்த நிலையில், மத்திய அரசு தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் அவர்களை நியமனம் செய்தது. அதன் பிறகு தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பண்ணாரி லால் புரோகித் 2021ஆம் ஆண்டு வரையில் செயல்பட்டு வந்தார். ஆனால் தற்சமயம் அவர் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், சென்ற 2019 ஆம் வருடம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து தற்சமயம் நாடு முழுவதும் அமைதியான சூழல் நிலவி வருகின்றது. அந்த சமயத்தில் அந்த சட்டத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய கட்சிகள் கூட தற்போது அமைதியான நிலைக்கு சென்று விட்டார்கள். ஆனால் திடீரென்று தற்சமயம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மீண்டுமொரு பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளியாக இருந்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதனை அடுத்து அந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஓரிரு தினங்களில் புதிய ஆளுனரை தமிழகத்திற்கு நியமனம் செய்து தன்னுடைய அதிரடியை தொடங்கி வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய உடனேயே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக உளவுத்துறை மூலமாக ஒரு தகவல் சென்று இருக்கிறது. இந்த தீர்மானத்தின் தொடர்ச்சியாக மறுபடியும் நாட்டில் எங்கும் போராட்டங்கள் உண்டாகி விடக்கூடாது என்ற எச்சரிக்கையையும் உளவுத்துறை செய்திருக்கிறது. அந்த விதத்தில் தமிழக அரசு நிறைவேற்றிய இந்த தீர்மானம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறது என தெரிவிக்கிறார்கள். இதனை அடுத்து மேல் மட்டங்களில் நடந்த ஆலோசனை போன்றவற்றை எடுத்து ஆர். என்.ரவி பெயரை பிரதமர் நரேந்திர மோடி சாய்ஸாக தேர்ந்தெடுத்தார் என சொல்கிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உளவுத்துறையின் ஸ்பெஷல் டைரக்டராக பணிபுரிந்த ஆர் என் ரவி சென்ற 2012 ஆம் வருடத்தோடு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் சென்ற 2014ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமராக பதவி ஏற்ற சமயத்தில் பிரதமர் அலுவலகத்தில் உளவுத்துறைக்கு என ஒரு இணைப்புக் குழு அமைக்கப்பட்டது அந்த குழுவிற்கு ரவியை தான் பிரதமர் நரேந்திர மோடி தலைவராக நியமனம் செய்தார் இதன்பின்னர் நாகாலாந்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரும் பணியை மிகச்சிறப்பாக செய்த காரணத்தால், அவரை நாகாலாந்து ஆளுநராக பிரதமர் நரேந்திர மோடி நியமனம் செய்தார். காவல்துறை அதிகாரியான அவரை தற்சமயம் தமிழ்நாட்டிற்கு ஆளுநராக அனுப்பி வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இரண்டு ஆண்டுகளாக நாகாலாந்தில் ஆளுநராக பணிபுரிந்த சமயத்தில் அங்கு அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் ரவி ஈடுபாடு காட்டியிருக்கிறார். அதிலும் நாகாலாந்து தனிநாடு கோரிக்கையை முன்வைத்த அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு பல அதிர்ச்சி வைத்தியங்களை ரவி கொடுத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதோடு சர்ச்சைக்குரிய மற்றும் பதற்றமான பகுதிகளுக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் ஆளுநர் ரவி ஆய்வுக்கு சென்று வந்ததாகவும் தெரிவிக்கிறார்கள். அதோடு அதிகாரிகளின் செயல்பாடுகள் அதிலும் குறிப்பாக காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளை நேரடியாகவே ரவி கண்காணித்தார் என்று தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறு காவல்துறை மற்றும் உளவுத் துறை உள்ளிட்ட மிக முக்கிய துறைகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த பின்புறம் உள்ள ஒருவரைத்தான் தமிழக ஆளுநராக தற்சமயம் நியமனம் செய்திருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. இதன் மூலமாக தமிழ்நாட்டிலும் இனி அடிக்கடி ஆளுநர் ஆய்வுப்பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கிறார்கள். அதோடு ரவி ஒரு அரசியல்வாதி இல்லை என்ற காரணத்தால் அவருடன் அரசியல் ரீதியாக எந்தவிதமான திட்டமும் போடுவது சாத்தியமில்லாதது எனவும், சொல்கிறார்கள் ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் நிச்சயமாக தமிழக அரசு நிர்வாகத்தில் ரவியின் தலையீடு இருக்கும் என்று அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் ஆணித்தனமாக தெரிவிக்கிறார்கள். அதிலும் காவல் துறையின் செயல்பாடுகளில் அவர் நேரடியாக தலையிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். அதோடு ஒரு ஆளுநருக்கு என இருக்கின்ற அனைத்து அதிகாரங்களையும் ரவி நிச்சயமாக பயன்படுத்துவார் என கூறுகிறார்கள்.

இதற்கிடையே தமிழக ஆளுநராக அவர் நீக்கப்பட்டதாக தகவல் கிடைத்த மறுநொடியே முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு ஒரு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு ரவியை வரவேற்பதாகவும் அவர் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் ஆளுநர் நியமன விவகாரத்தில் மோதல் போக்கு இருக்கவே கூடாது என்று ஸ்டாலின் நினைப்பதுதான் என கூறுகிறார்கள் அது மேற்கு வங்கம் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதைப்போல தமிழ்நாட்டிலும் ஆளுநர் முதலமைச்சர் இருவருக்கும் இடையில் மோதல் எப்போதும் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாக கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் ஆளுநர் மாற்றம் என்பது குடி உரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு பதிலடி என்பதை நன்கு உணர்ந்து இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு ஏற்றவாறு இனிய அரசியல் ரீதியான செயல்பாடுகளில் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.