விரைவில் சந்திக்க இருக்கும் திமுகவின் இரு துருவங்கள்!

Photo of author

By Sakthi

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. தற்சமயம் ஸ்டாலின் முதல்வராக பதவி வகித்து வருகிறார். இவ்வாறான சூழலில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை எனவும், ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்த அவருடைய அண்ணன் அழகிரி தற்சமயம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இவ்வாறான சூழ்நிலையில், ஸ்டாலின் அழகிரியை சந்திக்க இருப்பதாக திமுகவின் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் உலாவிக் கொண்டிருக்கிறது.

ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் ஸ்டாலின் மற்றும் அழகிரியின் மகன்களான உதயநிதி மற்றும் துரைதயாநிதி ஆகிய இருவரும் கட்டித் தழுவிக் கொண்ட காட்சிகள் திமுகவினர் இடையே ஆனந்த கூத்தாடும் விதமாக இருந்தது.இவ்வாறான சூழ்நிலையில், அழகிரியை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற இருப்பதாக திமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.