இறப்பில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

Photo of author

By Sakthi

சமீபகாலமாகவே நாடக காதல் கும்பலால் அநேக பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு அவர்களின் வழக்கை முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இது ஆங்காங்கே அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.அந்த வகையில் உளுந்தூர்பேட்டையை அடுத்து இருக்கின்ற திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேவியானந்தல் கிராமத்தைச் சார்ந்த வீரமணி என்பவரின் மகள் சரஸ்வதி வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்த இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் அவரை காதலிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சரஸ்வதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. அதன் பிறகும் கூட அவர்களுடைய தொந்தரவு தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் காலை சரஸ்வதி கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் வீட்டு வாசலில் பிணமாக கிடக்கிறார். இந்த கொலைக்கான காரணம் தெளிவாக தெரியாத ஒரு சூழ்நிலையில், மர்ம மரணம் என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தார்கள் ஆனால் தற்சமயம் அதற்கான காரணம் முழுவதுமாக தெரியவந்திருக்கிறது.

அதாவது அவர் கொலை செய்யப்பட்ட அன்றைய தினம் காலை சரஸ்வதியை அவருடைய வீட்டிற்கு அருகிலேயே ரங்கசாமி வழிமறித்து அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அப்படி இல்லை என்றால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது ரீதியான மிரட்டலையும் அவர் விடுத்திருக்கிறார். அவருடன் அவருடைய சகோதரர் கிருஷ்ணசாமி மற்றும் நண்பர் ரவீந்திரன் உள்ளிட்டோரும் சரஸ்வதியை மிரட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருந்தாலும் இதனை ஏற்றுக்கொள்ளாத சரஸ்வதி ரங்கசாமி திருமணம் செய்து கொள்ள இயலாது என்று தெரிவித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கசாமி மற்றும் கிருஷ்ணசாமி ரவீந்தர் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து சரஸ்வதியின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்து உடலை அவருடைய வீட்டு வாசலில் போட்டுவிட்டு சென்று விட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்பிறகு காவல்துறையினரின் விசாரணையில் இந்த உண்மைகள் தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

காதலிக்க மறுத்த ஒரு பெண்ணை கொலை செய்வதை விடவும் ஒரு மோசமான செயல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஒரு சில நாடக காதல் கும்பலின் தவறான வழிகாட்டுதலுக்கு உட்படுத்தப்படும் இளைஞர்கள் தான் இது போன்ற செயல்களை செய்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் சமூக நல்லிணக்கம் அறவே இல்லாமல் போய்விடும் என்ற பயமும் ஏற்படுகிறது.

தற்போது இருக்கக்கூடிய இளைஞர்களை நல்வழிக்கு பரப்ப வேண்டும் என்ற காரணத்திற்காக தான் அம்பேத்கர் கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் என்று அம்பேத்கர் தெரிவித்தார். ஆனால் ஒருசில பட்டியலின தலைவர்களில் சிலர் தங்களை நம்பி வந்த இளைஞர்களை தவறான வழியில் நடக்கச் செய்து நாடக காதல் செய்வதற்கு ஊக்குவித்து கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாகவே இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று அப்பாவி இளம் பெண்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைகிறது.

இந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியீடு இருக்கின்ற ஒரு இணையதள பதிவில் உளுந்தூர்பேட்டை திமுக தொண்டர் வீரமணியின் சரஸ்வதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அவருடைய குடும்பத்திற்கு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக நிதிஉதவி கொடுத்திருக்கிறது. அவருடைய சகோதரியின் படிப்பிற்கும் திமுக பொறுப்பேற்கும் என்று தெரிவித்ததோடு குற்றவாளிகள் எந்தவிதத்திலும் தப்பி விடாதவாறு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அரக்கோணத்தில் நடைபெற்ற இடத்தை குறைக்க சாதிவெறி சாயம் பூசிய ஸ்டாலினுக்கு தலித் சாதி வெறி கும்பலால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு இருப்பது ஏன் கண்ணுக்கு தெரியாமல் போனது என்று இணையதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.