அழைப்பிதழை பிரித்து பார்த்த கலைஞர் தெரிவித்த நகைச்சுவை செய்தி! கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர்!

Photo of author

By Sakthi

சிங்காரச் சென்னை 2.o தூய்மை பணிகளுக்காக 36 கோடி ரூபாயில் 1684 மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் மற்றும் 15 காம்ப்ரட் இயந்திரங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை மாநகராட்சியில் ரிப்பன் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே என் நேரு போன்றோர் பங்கேற்றார்கள்.

அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் தான் மேயராக பணியாற்றிய சமயம் தொடர்பாகவும், இதுவரையில் தன்னுடைய பழைய நினைவுகள் தொடர்பாகவும், விவரித்தார். அந்த விதத்தில் சென்ற 1996-ஆம் வருடம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அமைச்சரவையில் தன்னை சேர்க்குமாறு திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கருணாநிதியிடம் கோரிக்கையை வைத்ததாகவும், ஆனால் அமைச்சரவையில் தன்னை சேர்க்க அவர் மறுத்துவிட்டதாகவும் கூறியிருக்கின்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதேசமயம் அந்த சமயத்தில் பொது மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படும் மேயர் தேர்தல் வந்த சமயத்தில் தன்னை வேட்பாளராக அறிவித்து மேயராக்கியவர் கருணாநிதி என்று தெரிவித்திருக்கிறார். தான் வருவதற்கு முன்னர் மேயர் என்றால் 100 சவரன் தங்கச் சங்கிலியை அணியவும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, விழாக்களில் பங்கேற்பது தான் வேலை என்ற சூழ்நிலை இருந்தது என்றும் தான் மேயராகிய பின்னர்தான் அந்த நிகழ்ச்சியை உடைத்தெறிந்து பொதுமக்கள் பணியாற்றுவது தான் மேயரின் வேலை என்ற நிலையை ஏற்படுத்தியதாக சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதோடு தான் மேயராக பொறுப்பேற்ற சமயத்தில் அதற்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் தந்தபோது ஒரு நிமிடம் அழைப்பிதழை மட்டும் உற்றுநோக்கிய அவர் எல்லோரும் உன்னை ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் இருக்கின்ற ஒரு அறையில் அமர வைக்க நினைத்தார்கள். நான் உன்னை எவ்வளவு பெரிய கட்டிடத்தில் அமரவைத்து இருக்கிறேன் பார்த்தாயா? என்று நகைச்சுவையாக தெரிவித்ததாக தன்னுடைய கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின். அதாவது ரிப்பன் மாளிகையில் அமர வைத்ததை தான் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

ஆகவே ரிப்பன் மாளிகை மூலமாக எப்போது சென்றாலும் தவறாமல் அந்த கட்டிடத்தை நான் பார்த்துக்கொண்டே செல்வேன் என்றும், அந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார் ஸ்டாலின். அதோடு சட்டசபை நடந்துகொண்டிருக்கும்போது பொதுவாக எந்த நிகழ்ச்சிகளிலும் நான் தேதி கொடுப்பதில்லை எனவும், சிங்காரச் சென்னை 2.o திட்டத்தின் கீழே தூய்மைப்படுத்தும் பணிகள் என்ற காரணத்தால், சென்னை மாநகராட்சி சார்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.