கோயம்புத்தூர் மாவட்டம் புறக்கணிப்பா? சட்டசபையில் கொந்தளித்த நயினார் நாகேந்திரன்!

Photo of author

By Sakthi

கோயமுத்தூர் மாவட்டத்தை எந்த விதத்திலும் புறக்கணிக்கவில்லை என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் தந்திருக்கிறார்.ஆளுநர் உரையின் மீது இரண்டாம் நாளாக நேற்றைய தினம் சட்டசபையில் விவாதம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னரே திமுக அரசு கோயம்புத்தூர் மாவட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் விவாதத்தின்போது பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாவது,

எல்லோருக்குமான அரசுதான் இது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வருகின்றார். இருந்தாலும் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்டு வரும் மாநிலத்திலேயே அதிக வருமானத்தை கொடுக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆளுநர் உரையில் எந்த விதமான அறிவிப்பும் இடம் பெறாமல் இருப்பது வருத்தம் தருவதாக இருக்கிறது என்றும், அதிமுக கூட்டணி வெற்றி பெற்று இருப்பதால் கோயம்புத்தூர் மாவட்டத்தை திமுக அரசு புறக்கணிப்பு செய்கிறதா என்றும், அவர் கேள்வி வைத்திருக்கிறார்.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டம் எந்தெந்த விதத்தில் அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்று தெரிவித்தால் அதற்கு பதில் தெரிவிக்கலாம். வாக்களித்தவர்கள் பெருமைப்படும் அளவிற்கு வாக்களிக்காதவர்களுக்கும் எல்லா விதமான உதவிகளும் செய்யப்படும் வாக்களித்தவர்கள் திமுகவிற்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று நினைத்து பார்க்கும் அளவிற்கு திமுக அரசின் செயல்பாடுகள் இருக்கும் என்று தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே நான் சொல்லி இருந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தை எந்த விதத்திலும் அரசு புறக்கணிக்கவில்லை. பிரதமரை சந்தித்து மனு அளித்த சமயத்தில் கூட கோயமுத்தூர் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். கோவை மாவட்டத்திற்கு இன்னும் அதிகமான சேவைகளை செய்வோம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.