மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகை புரிகிறார்! அங்கு அவரை காண அலைகடலென குவியும் பொதுமக்கள்!!
திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்தினம் ஆம்பூர் வருகை புரிந்தார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பஸ் நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டைக்கு வருகை தந்தார்.பின்னர் அங்குள்ள பாரதிநகரில் உள்ள ஜி.கே.ரெசிடென்சியில் தங்கினார்.இன்று ராணிப்பேட்டை பாரதி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார். பின்னர் ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.
விழாவில் சுமார் 60 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் ராணிப்பேட்டை பிஞ்சி ஏரி பொழுதுபோக்கு அம்சங்களை சரிசெய்து வரும் பணிகளை முதலமைச்சர் காணயிருக்கிரார். விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து கொண்டு வர வேண்டும்.மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முதலமைச்சர் வருகையையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி தலைமையில், வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உள்ளிட்டோர் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான போலீசார் ராணிப்பேட்டை நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மைதானத்தில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.அதை காண லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிவார்கள் என போலீசார் கூறுகிறார்கள். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.