திமுகவினருக்கு முக்கிய வேண்டுகோளை வைத்த ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நேற்று ஒரே தினத்தில் உற்பத்தி 1079 பேருக்கு நேற்று உரையாற்றிய பிறகு இந்த நிலையில், மொத்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 9 ஆயிரத்து 700 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்றைய தினம் 186 பேர் இந்த நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள். மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 755 ஆக அதிகரித்திருக்கிறது. 31 ஆயிரத்து 855 பேர் குணமடைந்த நிலையில், மொத்த குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 74 ஆயிரத்து 539 ஆக அதிகரித்திருக்கிறது.

கோவை மாவட்டத்தில் சென்ற 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 3937 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 818 பேருக்கும், இந்த நோய்த்தொற்று உறுதி செய்திருக்கிறது. அதேபோல திருச்சியில் 1287 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்து 823 பேருக்கும் மதுரை மாவட்டத்தில் 1140 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1831 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 379 இருக்கும் இந்த நோய் தொற்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரியை பொருத்தவரையில் 1007 பேருக்கும் இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் இந்த தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தாலும் உள் மாவட்டங்களில் இந்த நோய் தொற்று நோய் பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

இந்த சூழலில் இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கின்ற தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கின்ற பதிவில் கோயமுத்தூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற மாவட்டங்களில் நோய்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாளை அந்த பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட இருக்கின்றேன். அவசர கால பயணம் என்ற காரணத்தால் கழகத்தினர் நேரில் வருவதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம். பொது மக்களின் பசியைப் போக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.