தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நேற்று ஒரே தினத்தில் 31 ஆயிரத்து 79 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 9 ஆயிரத்து 700 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 486 ஆக இருக்கிறது. இந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 755 ஆக அதிகரித்திருக்கிறது. 31 ஆயிரத்து 255 பேர் இந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து அதைத்தொடர்ந்து மொத்த நலம் பெற்றோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 74 ஆயிரத்து 539 ஆக அதிகரித்திருக்கிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 3937 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. விருதுநகரில் 118 பேருக்கு இந்த நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல திருச்சியில் 1787 பேருக்கும் திருப்பூரில் 1823 பேருக்கும் மதுரையில் 1140 நபர்களுக்கும் இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல ஈரோடு பகுதியில் 1731 பேருக்கும், செங்கல்பட்டில் 1329 பேருக்கும், கன்னியாகுமரியில் 1007 பேருக்கும், இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைய தொடங்கினாலும் பல மாவட்டங்களில் நோய் தொற்று பரவ அதிகரித்திருப்பது மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், கோயமுத்தூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு தமிழக அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதோடு திருப்பூர் ஈரோடு கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் நாளை முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.