தலைநகர் சென்னையில் நேற்று நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர், கட்சியை சார்ந்தவர்கள் உண்டாக்கும் பிரச்சனை தொடர்பாக வேதனையுடன் பேசி இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய இந்த உருக்கமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து திமுகவின் பொதுக்குழு மேடையில் பேசியபோது அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னை தான் குறை சொல்வார்கள். பலமுனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவன் நான் இன்று தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் திமுக தலைவர் மறுபக்கமும் தமிழக முதலமைச்சர் அத்தனத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதை போல இருக்கிறது என்னுடைய நிலை. இந்த சூழ்நிலையில் இருக்கின்ற எண்ணெய் மேலும் துன்பப்படுத்தும் விதத்தில் மூத்த அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் சொல்வது என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.
உண்மையாக நாள்தோறும் நம் கட்சியை சார்ந்த யாரும் பிரச்சனையை ஏற்படுத்தக் கூடாது என்று தான் கண் விழிக்கிறேன். இது சில சமயங்களில் என்னை தூங்க விடாமல் கூட செய்கிறது. என்னுடைய உடம்பைப் பார்த்தாலே தங்களுக்கு நன்றாக தெரியும் என்று வேதனையுடன் பேசி உள்ளார்.
அத்தோடு தங்களுடைய ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது மிக, மிக எச்சரிக்கையுடன் பேசுங்கள். நீங்கள் கூறுவதை வெட்டி, ஒட்டி பரப்புவார்கள் இதுதான் எதிரிகளின் நோக்கம். இது முக்கியமான காலகட்டம் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.
ஆகவே யாரும் மெத்தனமாக இருக்க வேண்டாம் எனவே நாம் பயன்படுத்த வேண்டிய சொற்கள் மிக, மிக முக்கியமானவை. ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொள்ளும் ஆகவே மற்றவர்களிடம் பேசும் போது மிக மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார்.
அவருடைய இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலத்தை விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒருபுறம் அவருடைய உருக்கமான பேச்சால் பலரும் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்ற நிலையில், மற்றொரு தரப்பினர் அவரால் ஆளுமையான தலைவராக இருக்க முடியவில்லை என்று விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.