திமுக அரசியல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது! பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!

Photo of author

By Sakthi

திமுக அரசியல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது! பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!

Sakthi

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நேற்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தார்.

பொதுவாக எப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தாலும் அவருடைய வருகையை கடுமையாக எதிர்த்து வந்தது திமுகதான். ஆனால் தற்சமயம் திமுக ஆளும் கட்சியாக இருக்கின்ற நிலையில், திமுகவின் சுபாவம் அப்படியே மாறிப்போயிருக்கிறது.

முன்பெல்லாம் பிரதமரை விமர்சித்து பேசிக்கொண்டிருந்த திமுக தற்போது அவரை வரவேற்பதற்கு தடபுடலான ஏற்பாடுகளை செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் எல்லோரையும் உள்ளடக்கிய தமிழகத்தின் வளர்ச்சியே திராவிட மாடல் ஆட்சி என கூறினார்.

அதோடு நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்கவேண்டும், கட்சத்தீவை மீட்டு தரவேண்டும், தமிழக திட்டங்களுக்கு நிதி பங்களிப்பு வழங்குவதை உயர்த்தி வழங்க வேண்டும், என பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அதுவே உண்மையான சுயாட்சியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கின்ற பாஜகவின் தலைவர் அண்ணாமலை தன்னுடைய வலைத்தளத்தில் சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.

நரேந்திர மோடி தமிழகத்திற்கு பிரதமராக வருகை தந்திருப்பது பாஜக நிகழ்ச்சிக்காக அல்ல. பிரதமரை மேடையில் அமர வைத்துவிட்டு தமிழக முதலமைச்சர் அரசியல் செய்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய முதலமைச்சர் கருணை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாட்டின் ஒரு சாதாரண குடிமகனாகவும், பெருமை வாய்ந்த தமிழனாகவும், தமிழக முதலமைச்சரின் மோசமான நடத்தையால் நான் வெட்கப்படுகிறேன்.

கச்சத்தீவை பற்றி பேச விரும்பினாலும் கூட 1974ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் இலங்கைக்கு பரிசாக வழங்கியது யார் என்பதை முதலமைச்சர் மறந்துவிட்டார், ஏன் இந்த திடீர் விழிப்பு என தெரியவில்லை.

1974ஆம் ஆண்டு முதல் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து மக்களை சூறையாடியது என தெரிவித்திருக்கிறார்.

ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் எப்போதும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டதை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த ஒரு வருடத்தில் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இதனால் பயன் அடைந்து இருக்கின்றன எனக் கூறியிருக்கிறார்.

கூட்டாட்சி முறை தொடர்பாக முதலமைச்சர் பேசுகிறார். ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில் அவமதிப்பு செய்கிறார் இது கூட்டாட்சியின் எடுத்துக்காட்டு என குறிப்பிட்டுள்ளார்.

கூட்டாக ஏற்படுத்தப்பட்ட சூத்திரத்தின்படி நிலுவைத் தொகை செலுத்தப்படுகிறது. முதலமைச்சர் அவர்களுடைய விருப்பங்களை மட்டுமே முக்கியமாக நினைக்கிறார்.

திமுக எப்போதாவது உண்மைகளை கவனிக்கிறதா? அவர்களுக்கு அரசியலில் மட்டுமே ஆர்வம் இருக்கிறது என தன்னுடைய வலைதள பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.