நோய்த்தொற்று பரவல்! 50 கோடியை கடந்த உலகளாவிய குணமடைந்தவரின் எண்ணிக்கை!

0
72

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் நோய் தொற்று பரவும் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.

முதலில் அந்த நாட்டில் மட்டும் பரவி வந்த இந்த நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கிடையே பரவத்தொடங்கியது. சுமார் 220க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி இந்த நோய்த்தொற்று பரவல் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளுக்கு பரவுவதற்கான காரணமாக, இருந்த சீனாவை உலக நாடுகள் அனைத்தும் வெகுவாக விமர்சனம் செய்தனர்.

அதோடு ஐ.நா சபையில் இந்த நோய்த்தொற்று பரவலை உருவாக்கியதற்காக சீனாவின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், உலக நாடுகளை 2 வருட காலத்திற்கு மேலாக அச்சுறுத்தி வரும் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையிலும், நோய்த்தொற்று பரவல் உருமாற்றமடைந்து அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் உள்ளிட்ட பெயர்களில் உருமாற்றமடைந்து பல நாடுகளில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவாமல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,1,48,068 என அதிகரித்திருக்கிறது. இது நேற்றைய தினம் 52,95,40,303 என இருந்தது.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,32,52,734 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நோய்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 50,5,87,748பேர் விடுபட்டிருக்கிறார்கள். ஆனாலும் காரணமாக உலகம் முழுவதும் இதுவரையில் 63,7,585பேர் பலியாகி இருக்கிறார்கள்.