மலர் தூவினால் மயிர்கொட்டி விடுமா தளபதி? திமுக எம்எல்ஏ செய்த காரியத்தால் ஸ்டாலினை கலாய்த்த நெட்டிசன்கள்!

Photo of author

By Sakthi

ஸ்டாலின் அவர்களின் தலையிலே பூவை தூவிய தொண்டனை திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பொது இடத்தில் கெட்ட வார்த்தையில் வசை பாடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில், தேவராயபுரத்தில் கடந்த 2ஆம் தேதி அன்று திமுக சார்பாக நடத்தப்பட்ட மக்கள் கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்ற அந்த கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண் ஸ்டாலின் இடத்திலே சில அதிரடியான கேள்விகளைத் தொடுத்தார். அதற்கு மேடம் உங்களுக்கு நான் பதில் அளிக்க மாட்டேன். நீங்கள் வேலுமணி அனுப்பிய ஆள் அதன் காரணமாகவே இங்கே வந்திருக்கிருக்கிறீர்கள் வெளியே செல்லுங்கள் என்று சற்று காட்டமாக தெரிவித்திருக்கிறார். அதன் பின்பு அந்த பெண் காவல் துறையினரால் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

இந்த பேச்சானது முடிவுக்கு வருவதற்குள் இன்னொரு சம்பவம் கும்பகோணத்தில் நடந்திருக்கிறது. கும்பகோணத்தில் ஸ்டாலின் காரை விட்டு இறங்கி நடந்து வரும் நேரத்தில் ஸ்டாலினின் தலையில் பூ தூவிய தொண்டர் ஒருவரை கும்பகோணம் சட்டசபை உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் தகாத வார்த்தைகளில் திட்டிய காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் சமூக வலைதளவாசிகள் மலர்தூவினால் மயிர்கொட்டி விடுமா தளபதி? என்று கேட்டிருக்கிறார்கள் .