புதிய நாடாளுமன்ற வழக்கு! உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

0
80

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு தடை கிடையாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்திருக்கிறது.

மத்திய அரசு 971 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் அதன் சுற்று வளாகங்களை அமைக்கும் பணியை முன்னெடுத்து. ஆனால் அதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கக்கூடாது என்று தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை கட்டுமான பணிகளையும், கட்டடம் இடிக்கும் பணிகளையும் ஆரம்பிக்க கூடாது.

ஆனாலும் ஆய்வு பணிகளை தொடர்ந்து நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு கூறியது.

அந்த தீர்ப்பில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கின்றது.3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் இரண்டு நீதிபதிகள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி அளித்த தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். கட்டுமான பணிகள் நடைபெறும் பொழுது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலே தூசி பரவலை தடுப்பதற்கு தேவையான கருவிகளை உபயோகப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.