M.K ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரல்!

Photo of author

By Kowsalya

M.K ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரல்!

Kowsalya

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடல் பயிற்சிக்கு பாராட்டுதலுக்கு பெயர் பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், எப்போதும் உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்து இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.

 

வழக்கமாக, அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் வைரலாகி பலரை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும். இதேபோல்,இன்று தமிழக முதல்வர் எடை பயிற்சி செய்யும் புதிய வீடியோக்கள் சனிக்கிழமை அதாவது இன்று சமூக ஊடகங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

 

https://twitter.com/PramodMadhav6/status/1428949215309230081?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1428949215309230081%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

 

 

68 வயதான திமுக தலைவர் தனது தோள்பட்டை மற்றும் தசைகளுக்கு பயிற்சி அளிப்பதை ஒரு வீடியோவில் காணலாம். மற்றொரு வீடியோவில், அவர் தனது முதுகை வலுப்படுத்த ஒரு ஜோடி 10 கிலோ தட்டுகளை தூக்குகிறார். அவர் கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி சைக்கிள் ஓட்டுவதை நாம் பார்த்திருக்க முடியும்.

 

தமிழக முதல்வர் யோகா ஆர்வலராகவும் இருக்கிறார்., அவர் தினமும் யோகா செய்கிறார். மற்றவர்களும் அதனை செய்ய வலியுறுத்துகிறார். தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, முதல்வர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து நடைபயிற்சியும் மேற்கொள்கிறார்.